Connect with us

CINEMA

எம்.ஜி.ஆரோடு ஜெயலலிதா கடைசியாக நடித்த படம் பட்டிக்காட்டு பொன்னையா.. அட்டர் ப்ளாப் ஆன பின்னணி..

தமிழ் சினிமா உலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கினார். 50 களில் தனது வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த எம் ஜி ஆர் அறுபதுகளில் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தை தொட்டார். அப்போது அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார். தன்னுடன் நடிக்கும் கதாநாயகி யாராக இருக்க வேண்டும் என்பதையும் அவர்தான் முடிவு செய்வார்.

கதாநாயகிகளை பொறுத்தவரை ஒரு கட்டத்துக்கு மேல் தொடர்ந்து அவர்கள் தன் படங்களில் இருப்பதை எம் ஜி ஆர் விரும்பமாட்டார். ஏனென்றால் அந்த ஜோடி ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும் என்பதால்தான். அப்படிதான் சரோஜா தேவி, ஜெயலலிதா, லதா, உள்ளிட்ட சில ஹீரோயின்கள் ஒரு கட்டம் வரை தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வந்தனர். இதில் ஜெயலலிதாதான் அவரோடு அதிக படங்களில் நடித்தவர். இருவரும் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளனர்.

   

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முதல் முதலாக ஜெயலலிதா எம் ஜி ஆரோடு இணைந்து நடித்தார். அதன் பின்னர் தொடர்ந்து எம் ஜி ஆரின் பல வெற்றிப் படங்களில் அவர் அங்கமாக இருந்தார். இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் பட்டிக்காட்டு பொன்னையா என்ற திரைப்படம்தான். 1973 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தில் எம் ஜி ஆர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். விவசாயி அண்ணாக ஒரு வேடமும், கல்லூரி செல்லும் மாணவராக ஒரு வேடத்திலும் நடித்திருந்தார். இதில் அண்ணன் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். இந்த படத்தை பி எஸ் ரங்கா இயக்கி இருந்தார். படம் வெளியான போது அட்டர் ப்ளாப் ஆனது.

அதற்கு காரணம் 50 வயது எம் ஜி ஆர் ஒரு கல்லூரி மாணவனாக கொஞ்சம் நெகட்டிவ் தன்மையுள்ள கதாபாத்திரத்தில் நடித்ததுதான். அதுமட்டுமில்லாமல் அந்த பாத்திரத்துக்கு ஜோடியாக ராஜஸ்ரீ யிடம் அத்துமீறி நடந்து கொள்வது போன்ற காட்சிகள் கூட இருந்தன. இது எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் படத்தை நிராகரித்தனர்.

Continue Reading

More in CINEMA

To Top