Categories: சினிமா

வெளிநாட்டிற்கு சென்ற வைரமுத்து.. உள்நாட்டு அமைச்சர்களுக்கு விடுத்த வேண்டுகோள்.. ஓ இதுதான் விஷயமா..?

Spread the love

பிரபல பாடலாசிரியரான வைரமுத்து துபாய் சென்றுள்ள நிலையில் ஒரு சிறப்பான திட்டத்தை உள்நாட்டு அமைச்சர்களுக்கு அட்வைஸாக கொடுத்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 44 ஆண்டுகளாக சிறந்த பாடலாசிரியராக வலம் வருகிறார். 44 ஆண்டுகளுக்கு முன்பு நிழல் என்கின்ற திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலை எழுதி தனது திரைபயணத்தை தொடங்கிய வைரமுத்து பல விருதுகளை சொந்தமாக்கி இருக்கின்றார்.

1985 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதுவரை ஏழு தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசு வழங்கும் ஆறு மாநில விருதுகள், 25க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கவி தொகுப்பு என எழுதி மிகப்பெரிய பாராட்டுக்குரிய மனிதராக வலம் வருகின்றார்.

முன்னணி நடிகர்களாக விளங்கும் சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு இவர் பாடல் எழுதி இருக்கின்றார். தற்போது திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருக்கும் வைரமுத்து அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் சில விஷயங்களை பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் பதிவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது:” துபாயில் இருக்கிறேன் எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு வெளிநாடு செல்லும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா என்று தெரிவித்திருக்கிறார்.

Mahalakshmi

Recent Posts

“6 இடங்களில் ஒரே நேரத்தில் நடந்த ஆபரேஷன்”… அலறித் துடிக்கும் எதிர்க்கட்சிகள்… அடுத்தடுத்து தூக்கப்படும் விஐபிக்கள்: தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு….!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறிவரும் வழக்குப்பதிவுகளும் சோதனைகளும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே திமுக முக்கியப் பிரமுகர்கள்…

3 minutes ago

இன்று இரவு 9:45 மணிக்கு கரண்ட் கட்?…. உங்க போனுக்கு இந்த மெசேஜ் வந்தா மக்களே உஷார்…. தமிழ்நாட்டில் தீயாய் பரவும் புதுவகை சைபர் மோசடி…. எச்சரிக்கை….!

"மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என போலி குறுஞ்செய்தி அனுப்பி, மின்சார வாரியத்தின் பெயரில் பொதுமக்கள் பணத்தைச் சூறையாடும் புதிய வகை…

13 minutes ago

“ஜெயலலிதா சொன்ன லேடியா? மோடியா? மறந்துபோச்சா?”…. அப்போ ரோஷம் வரலையா…. மரகதம் குமரவேலை வெளுத்து வாங்கிய புளூ சட்டை மாறன்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது.…

23 minutes ago

கடற்கரையில் கிடந்த செல்போன், பைக்…. 30 மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்ட கமலக்கண்ணன்… அதிர்ச்சி சம்பவம்…!

திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (35). தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், விநாயகர்…

28 minutes ago

லண்டனில் திடீரென ரத்தான முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சி…. சற்றுமுன் வெளியான அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி….!

லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யைக் காண்பதற்காக, அவர் தங்கியுள்ள தேம்ஸ் நதிக்கரை ஓட்டல் எதிரே ஏராளமான தமிழக ரசிகர்கள்…

38 minutes ago

“அவர் அங்கே… இவர் இங்கே”… 52 வயதில் 2வது திருமணம் செய்த மாஜி மனைவியால் உச்சகட்ட பரபரப்பு….. லண்டனில் நடந்த ரகசிய திருமணம்….!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தற்போது ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டுச் சிறையில்…

46 minutes ago