அஜித்துக்கே சம்பள பாக்கி இருக்கா?… அடுத்தடுத்த சிக்கலில் சிக்கித் தவிக்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ்!

By vinoth on தை 7, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

   

90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். தீனா படம்தான் அவரை முழுமையாக ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. அதன் பின்னர் அவர் நடித்த அனைத்துப் படங்களும் ஆக்‌ஷன் மசாலாப் படங்கள்தான்.

   

 

தற்போது அவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதில் விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் பின்வாங்கியது. அதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் ரீமேக் உரிமையைப் பெறாமலேயே அதன் கதையைப் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் சம்மந்தப்பட்ட நிறுவனம் மிகப்பெரிய இழப்பீட்டை லைகாவிடம் கேட்பதாகவும் அது சம்மந்தமான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அதே போல லைகா நிறுவனமும் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அந்த நிறுவனம் பல ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.  இதனால் விடாமுயற்சி படத்துக்கே அஜித்துக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அஜித்தே லைகா மேல் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.