இப்ப இருக்குற எல்லா இசையமைப்பாளர்களும் இளையராஜாவை விட்டு அவரின் ஸ்டைலைதான் பாலோ பண்ணுகிறார்கள்… ஜோஷ்வா ஸ்ரீதர் கருத்து!

By vinoth on ஜனவரி 7, 2025

Spread the love

தென்னிந்திய திரை உலகில் காதல் படத்தின் மூலமாக தாக்கத்தை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மணிஷர்மா உள்ளிட்டவர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஜோஷ்வா ஸ்ரீதர் 2004 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் மூலமாக தான் இவர் முதன்முதலாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டாகின.

   

அதன் பின்னர் அவர் கவனிக்கப்படும் இசையமைப்பாளர் ஆகி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப் படங்களுக்கு இசையமைத்தார். ஆனாலும் அவர் திடீரென்று காணாமல் போனார் . அவரின் அனுகுமுறையால்தான் அவர் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகி ஜோதிடம் மற்றும் பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

   

 

இந்நிலையில் இவர் சமீபகாலமாக இணையத்தில் அதிகம் கவனிக்கப்பட்டவராக உள்ளார். அதற்குக் காரணம் அவரின் நேர்காணல்கள்தான். அப்படி அவர் அளித்த ஒரு நேர்காணலில் தமிழ் சினிமாவில் தற்போதைய இசையமைப்பாளர்களின் ஸ்டைல் பற்றி பேசியுள்ளார்.

அதில் “என்னைப் பொறுத்தவரை  இளையராஜா இசையமைக்கும் முறைதான் சரி என்பேன். ஆனால் இப்போதிருக்கும் எல்லா இசையமைப்பாளர்களும் தங்களுக்கு என்று ஒரு ஸ்டைல் வைத்துள்ளார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே ரஹ்மான் தொடங்கிவைத்த ஸ்டைலைதான் இப்போது பாலோ பண்ணி வருகிறார்கள். இளையராஜாவைப் பார்த்து வளர்ந்த நான் இப்படி ஒரு மாற்றம் நடக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை” எனக் கூறியுள்ளார் .