திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி கோவிலை கிரகண காலங்களில் மூடப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9.50 மணியிலிருந்து அதிகாலை 1:31 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அதனால் ஆறு மணி நேரத்திற்கு முன்பாகவே கோவில் கதவை மூட உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் வருகின்ற 7-ஆம் தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்பட உள்ளதாகக் கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிரகண காலம் முடிந்ததும் கோவில் கதவைத் திறந்து கோவில் முழுவதுமாக சுத்தம் செய்த பின்னர் புண்யாஹாவசனம் நடத்தப்படும். மேலும் தோமாலை சேவை, பஞ்சாங்க ஸ்ரவணம் மற்றும் அர்ச்சனை நடக்கும் . அதனால் காலை ஆறு மணியிலிருந்து தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
