அடக்கடவுளே இப்படியா நடக்கணும்?… தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… துக்கத்தில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!

By Divyamayakannan on ஆவணி 27, 2025

Spread the love

திருவாரூர் மாவட்டம் கூடூர் நாராயணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28), மனைவி சௌந்தர்யா (25). கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கணவன் மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாகவே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு சௌந்தர்யா தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

மனைவி விட்டு சென்றதை நினைத்து கணவன் மனமுடைந்து களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தைக் குறித்து போலீசார் வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.