தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாதிக்கா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லப்பர் பந்து திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளி பதிவு செய்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் தினேஷ் கார்த்திக்கும், ஹரிஷ் கல்யாணும் ஈகோவால் மோதிக் கொள்கின்றனர்.
தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் விளையாடுவதற்காக களத்தில் இறங்கும்போது எல்லாம் விஜயகாந்தின் பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் ஒலிக்கப்படுகிறது. இதே போல ஹரிஷ் கல்யாண் கிரிக்கெட் விளையாட களமிறங்கும் போது விஜயின் போக்கிரி பொங்கல் பாடல் ஒலிக்கப்படுகிறது. பொட்டு வெச்ச தங்க குடம் பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
விஜயகாந்தின் ரசிகராக இயக்குனர் கதாபாத்திரம் எழுதும் போது அனைத்தையும் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ரப்பர் பந்து பட குழுவினர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவு இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர். அவர்களுடன் கேப்டன் மனைவி பிரேமலதா மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர். படகுழுவினர் அங்கு நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram