மண்வாசனை பட ஷூட்டிங்கில் பாண்டியன் இப்படி பண்ணுவாருனு எதிர்பாக்கல… மனம்திறந்த நடிகை ரேவதி…

By Meena on செப்டம்பர் 26, 2024

Spread the love

ரேவதி கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது இயற்பெயர் ஆஷா கெலுன்னி என்பதாகும். இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி கன்னட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். எந்த சினிமா பின்புறமுமே இல்லாமல் சினிமாவிற்கு வந்து மிகப் பிரபலம் அடைந்தவர் ரேவதி. இவரது தந்தை ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

ரேவதி பள்ளியில் படிக்கும் போது மேடை பேஷன் ஷோகளில் பங்கேற்றார். அதில் ஒரு புகைப்படம் ஒரு பிரபல இதழின் அட்டைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதை பார்த்த பாரதிராஜா ரேவதியை அணுகி அவர் இயக்கவிருக்கும் மண்வாசனை திரைப்படத்திற்கு நடிப்பதற்காக கேட்டார். அதன்படி 1983 ஆம் ஆண்டு மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரேவதி.

   

முதல் படமே வெற்றி திரைப்படமாக ரேவதிக்கு அமைந்தது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ரேவதி. தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவருக்கு குவிய ஆரம்பித்தது. வைதேகி காத்திருந்தாள், ஆண்பாவம், கன்னி ராசி, மௌன ராகம், புன்னகை மன்னன், அஞ்சலி, கிழக்கு வாசல், தேவர்மகன், மறுபடியும், என் ஆசை மச்சான் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் ரேவதி.

 

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ரேவதி தனது முதல் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் மண்வாசனை திரைப்படத்தில் நானும் புதுசுதான் பாண்டியுனும் புதுசு தான். அப்போ சில சீன் எல்லாம் நடிக்கிறதுக்கு எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். பாக்யராஜ் ரொம்ப திட்டுவாரு. அப்படி மார்க்கெட் சீன்ல பாண்டியன் வந்து என்னை அடிக்கணும். அவருக்கு என்ன அடிக்கவே வரல. பாரதிராஜா கோவத்துல பாண்டியன் ஒரு அறை அறஞ்சுட்டாரு. அவர் என்ன பண்ணாரு அதே கோவத்துல என் கன்னத்துல உண்மையாவே பளார்னு ஞ்சுட்டாரு. அவர் அறைஞ்சதுல என் கன்னத்துல நாலு விரல் அப்படியே பதிஞ்சிருச்சு. கொஞ்ச நேரத்துக்கு எனக்கு காதே கேட்கல. இந்த மாதிரி அவர் பண்ணுவார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் ரேவதி.