“மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது?”… சிலிண்டர் தட்டுப்பாட்டால் பிரதமர் மோடி போட்ட அவசர மீட்டிங்…. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்….!

By Nanthini on பங்குனி 11, 2026

Spread the love

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். டெல்லியில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தத் தட்டுப்பாட்டிற்கு சர்வதேச அளவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்களே முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் போக்கு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது எரிவாயு தேவையில்லை பூர்த்தி செய்ய பெருமளவு இறக்குமதியையே நம்பியிருப்பதால், சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்படும் சிறு மாற்றமும் உள்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

   

தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் தற்போது விநியோகத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே சிலிண்டர் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, வணிக ரீதியிலான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சிலிண்டர் கிடைக்காமல் திணறி வருகின்றன. இது உணவுகளின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

   

இந்த நெருக்கடியைச் சமாளிக்க மாற்று வழிகள் குறித்து பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் மற்ற நாடுகளுடன் பேசி தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யவும், உள்நாட்டில் இருப்பை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் நிலைமை சீராகும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், தற்போதைய சூழல் நாடு முழுவதும் ஒருவித பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.