தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்னதாகவே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் சற்று முன் கணித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் நவம்பர் 26 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஏனைய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
