தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பெண்களுக்கு எதிரான வன்முறை தமிழகத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. நாள்தோறும் கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஆட்சியை விட தற்போதைய திமுக ஆட்சியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
வன்கொடுமை சம்பவங்கள் கடந்த ஆட்சியை விட 17 சதவீதம் உயர்ந்துள்ளது. மிகவும் மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு கூட பஞ்சாங்கம் பார்த்தேன். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று ஒரு பஞ்சாகத்தில் போட்டு உள்ளது என்று நயினார் நாகேந்திரன தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
