தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாளை மறுநாள் இது புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
