BREAKING: மீண்டும் கனமழை…. புயல் சின்னம் உருவானது….. தமிழகத்திற்கு வந்த அலெர்ட்…..!

By Nanthini on ஐப்பசி 21, 2026

Spread the love

வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் துரை அவர்கள் சென்னையில் தெரிவித்துள்ளார். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வடக்கு நோக்கி நகரும் பட்சத்தில், சென்னையில் வரும் அக்டோபர் 25-ம் தேதி வரை தொடர்ச்சியான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், எல் நினோ நிகழ்வினால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த பருவமழையானது வழக்கத்தைவிட நீடித்து வரும் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரை தொடரும் என்றும் மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளார். இயல்பை விடக் கூடுதலாக மழை பெய்யக் கூடும் என்பதால், நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்வதோடு விவசாயப் பணிகளுக்கும் இது பெரிதும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.