“காதலனை சந்திக்க வந்த வெளிநாட்டுப் பெண்…” வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறிய நண்பன்… பலமுறை கண்டித்தும் அடங்காத ஆசை…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on ஆடி 28, 2026

Spread the love

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள தனது காதலனைச் சந்திப்பதற்காகக் கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்துள்ளார். காதலனின் குடியிருப்பில் தங்கியிருந்த வேளையில், அட்வான்டேஜைப் பயன்படுத்தி அவரது நண்பர் ஒருவர் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்துக் காதலன் கண்டித்த போதிலும், அந்த நபர் தனது லீலைகளை நிறுத்தாமல் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிய பிறகும் கூட, அந்த நபர் தொலைபேசி வாயிலாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், நெதர்லாந்து தூதரகத்தின் உதவியை நாடி ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்போது தலைமறைவாக இருக்கும் அந்த நபரைக் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.