காதலியை காட்டுக்குள் வைத்து பலாத்காரம் செய்த காதலன்.. தப்பியோடிய அடுத்த நிமிடமே….. இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்….!

Spread the love

ஒடிசா மாநிலத்தில் காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் ஒருவர், அடுத்தடுத்து நேர்ந்த கொடூரங்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக காதலன் அளித்த வாக்குறுதியை நம்பி அவருடன் சென்றுள்ளார். ஆனால், அந்த நபர் அப்பெண்ணைத் திட்டமிட்டு ஒரு மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரை பேருந்து நிலையத்தில் தனியாகத் தவிக்க விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

பாதுகாப்பற்ற நிலையில் பேருந்து நிலையத்தில் திகைத்து நின்றிருந்த அந்தப் பெண்ணுக்கு உதவுவதாகக் கூறி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு நபர் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளார். அந்த நபர் அப்பெண்ணைப் பாரதீப் நகரில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கும் அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். தனது கொடூரச் செயல் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், அந்தப் பெண்ணை நான்கு மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிப் படுகொலை செய்துள்ளார்.

மறுநாள் காலை அப்பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் இறங்கினர். இதில் காதலன் மற்றும் கொலை செய்த மர்ம நபர் ஆகிய இருவரும் அடுத்தடுத்து சிக்கினர்.

தற்போது தலைமறைவாக இருந்த காதலன் மற்றும் அந்த இளம்பெண்ணைக் கொலை செய்த நபர் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பெண்ணின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“மொபைல் போனில் வந்த ‘அந்த’ புகைப்படம்”… திருமண வீட்டை மரண வீடாக மாற்றிய சைபர் சைக்கோ…. மகளுடன் சேர்ந்து விஷம் குடித்து உயிரை மாய்த்த பெற்றோர்…!

மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…

9 minutes ago

634 கோடி ஊழல் வழக்கு… முன்னாள் அமைச்சர் நேருவுக்கு செக் வைத்த விஜய் அரசு… ஜூலை 10-ல் காத்திருக்கும் பெரிய சம்பவம்…!

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…

16 minutes ago

அதிமுக-வை அசிங்கப்படுத்திய விஜய்.. கோபப்படாமல் ‘நைஸ் ஸ்பீச்’ சொன்ன வேலுமணி… ஒரே நாளில் மாறிய தமிழக அரசியல் களம்….!

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…

27 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” நடுவானில் கொழுந்துவிட்டு எரிந்த ஹாட் ஏர் பலூன்.. பிரேசிலில் 8 பேர் உடல்கருகி பரிதாப பலி – பதைபதைக்க வைக்கும் பகீர் விபத்து..!!

பிரேசில் நாட்டின் சாண்டா கதரீனா மாகாணத்தில் உள்ள பிரையா கிராண்டே பகுதியில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஹாட் ஏர் பலூன்…

29 minutes ago

அதை செய்வதற்கு தவெகவினருக்கே வெட்கமில்லை… நாங்க ஏன் வெட்கப்படணும்..? ஆ. ராசா பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பிற கட்சி அமைச்சர்களை, திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஆ. ராசா…

36 minutes ago

குஷியோ குஷி..! தாய்மாமன் தங்கமோதிர திட்டம் தொடக்கம்.. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தாய்மாமன் தங்க மோதிரம்…

41 minutes ago