தனிமையில் உல்லாசம்… 600 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் உடல்… காதலியை கொன்று கணவனுக்கு காதலன் அனுப்பிய பார்சல்… சேலத்தில் நடந்த பயங்கரம்…!

Spread the love

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாறமங்கலம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (32) என்பவரும் நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தை சேர்ந்த சுமதி (30) என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது வரை குழந்தை இல்லை. இதனிடையே சுமதியை திடீரென காணவில்லை. இது தொடர்பாக சண்முகம் மற்றும் உறவினர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுமதி தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அன்று மாலை அதே பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவருடைய கடையில் ஒரு பார்சல் கொடுக்கப்பட்டது. அந்த பார்சலை வெங்கடேஷ் என்பவர் கொடுத்ததாக கூறி சண்முகத்திடம் கொடுத்தனர். பார்சலை பிரித்த சண்முகம் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பார்சலில் தன்னுடைய காதல் மனைவி சுமதி என் தாலி இருந்துள்ளது. இதனால் சுமதி மாயமான விவகாரத்தில் வெங்கடேஷுக்கு தொடர்பு இருப்பதாக சண்முகம் சந்தேகம் அடைந்த நிலையில் போலீசில் புகார் தெரிவித்தார்.

போலீசார் வெங்கடேஷ் (22) யார் என்று விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் வசித்து வந்ததும் சுமதி என் கள்ளக்காதலன் என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வெங்கடேச பிடித்து விசாரித்த போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது சுமதிக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி வழக்கம் போல இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

அப்போது சுமதி செல்போனுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இது குறித்து வெங்கடேஷ் கேட்டபோது சுமதி சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் சுமதி அணிந்து இருந்த துப்பட்டாவால் அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். அப்படி இருந்தும் மாத்திரம் தீராத வெங்கடேஷ் சுமதியை மூட்டையாக கட்டி ஏற்காடு குப்பனூர் சாலையில் முனியப்பன் கோவில் அருகில் சுமார் 600 அடி பள்ளத்தில் வீசி உள்ளார். வெங்கடேசன் இந்த கொடூர செயலை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சுமதியின் உடலை கட்டி வீசிய மூட்டையை தேடும் பணியை தொடங்கினர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சுமதியின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வெங்கடேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago