பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், போட்டியாளர்கள் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கம்ருதீன் மற்றும் பார்வதி இடையே ‘பி.ஆர். டீம்’ குறித்த விவாதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கம்ருதீன் தன்னை ‘விஜய் டிவி தயாரிப்பு’ என்று கூறிக்கொண்டதோடு, பார்வதி இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கலாம் எனக் குற்றம் சாட்டினார்.
பதிலுக்குப் பேசிய கம்ருதீன், தான் அணிந்துவரும் ஆடைகளுக்காக மட்டுமே சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளதாகத் தெரிவித்தது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. இந்த விவாதம் ஒருபுறம் இருக்க, பிக்பாஸ் வீட்டில் நடந்த கடினமான சிலை டாஸ்க்கில் அரோரா மற்றும் சுபிக்ஷா ஆகியோர் அசையாமல் நின்று வெற்றி பெற்றனர்.
காதல் ஜோடிகளாகப் பார்க்கப்பட்ட கம்ருதீன் – பார்வதி இடையே தற்போது ‘பேட் டச்’ உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்து உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கம்ருதீன் தனது பொருளாதார நிலையைச் சுட்டிக்காட்டிப் பேசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஒரு போட்டியாளர் தனது தோற்றத்திற்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…