உன்னை வேறு யாருக்கும் தர மாட்டேன்… காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு… என்கவுண்டரில் சிக்கிய காதலன்… உ . பி – யில் நடந்த கொடூரம்…!

By Swetha on ஐப்பசி 8, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், 19 வயது இளம் பெண் அவரது காதலனால் சுட்டுக் கொன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொலை சம்பவத்திற்குப் பிறகு, குற்றவாளி தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இருப்பினும், அச்சத்தின் காரணமாக தற்கொலை முடிவைக் கைவிட்டு, உடனடியாகச் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.

   

தப்பியோடிய நபரைப் பிடிக்கக் காவல் துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் நடைபெற்ற காவல் துறை உடனான துப்பாக்கிச் சூடு மோதலில், குற்றவாளி காயமடைந்ததை அடுத்து காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.