கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதிக்குட்பட்ட குஷால்நகரில், கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை 4:30 மணியளவில் பயங்கர தாக்குதல் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சுரைம், யூசுஃபா, ஹுஜைஃபா மற்றும் நியாமாத் ஆகிய நபர்கள் அடங்கிய கும்பல், நீளமான கத்திகளுடன் வந்து நடுரோட்டில் இருவரை வெறித்தனமாக வெட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ரியாஃன் கான் என்பவரும், அவருடன் இருந்த ஒரு சிறுவனும் பலத்த வெட்டுக்காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இக்கோரத் தாக்குதல் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. படுகாயமடைந்த இருவரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கே.ஜி.ஹள்ளி போலிஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள தாக்குதல் நடத்திய கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
