கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு விடுதியில், சட்ட விரோத உறவில் ஏற்பட்ட தகராறில், 20 வயதுப் பெண் தனது கள்ளக் காதலனால் கொலை செய்யப்பட்டார். வெடி மருந்து குச்சியை அவரது வாயில் வைத்து, கொடூரமாக கொலை செய்ததாக குற்றவாளி மீது குற்றம் சாட்டப்பட்டது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ரக்ஷிதா (20). இவர் கேரளாவை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியை திருமணம் செய்திருந்த நிலையில், சித்தராஜு என்பவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார். ரக்ஷிதாவும் சித்தராஜுவும் விடுதியில் தங்கியிருந்த பொழுது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. முதலில் கைபேசி வெடுத்ததால்தான் ரக்ஷிதா இறந்ததாக சித்தராஜு மற்றவர்களை திசை மாற்ற முயன்றார்.
இருப்பினும் தப்பிச்செல்ல முயன்ற சித்தராஜை பிடித்து, காவல் துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். மேலும் போலீசாரின் கிடுக்குபுடி விசாரணையில், ரக்ஷிதாவை கொல்வதற்காக ரசாயன வெடி மருந்து கலவையை கலந்து, அவர் வாயில் திணித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அதன் தன்மையை உறுதி செய்ய, தடயவியல் அறிவியல் ஆய்வாளர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
