SBI கிரெடிட் கார்டு :
செப்டம்பர் 16, 2025 முதல் கிரெடிட் கார்டு பாலிசியை புதுப்பிக்கும் பொழுது, அனைத்து கிரெடிட் கார்டு பாதுகாப்பு திட்டங்களும் தானாகவே புதுப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு மாற்றப்படும் என்று SBI கிரெடிட் கார்டு அறிவித்துள்ளது. அனைத்து கிரெடிட் கார்டு பாதுகாப்பு திட்டங்களுக்கும் (CPP ), பாலிசி புதுப்பிக்க வேண்டிய தேதியில் இருந்து, இந்த மாற்றம் பொருந்தும். குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே, வாடிக்கையாளருக்கு இந்த மாற்றம் குறித்து SMS /மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். புதுப்பிக்கப்பட்ட CPP திட்டத்தின் கட்டணம், பழைய திட்டத்தை விட குறைவு.
CPP என்பது பாதுகாப்பு வழங்கும் ஒரு புதிய சேவை நிறுவனம். இதில் பதிவு செய்யப்பட்ட கார்டுகள் தொலைந்து போனாலும்/ திருடப்பட்டாலோ, அதற்கு பாதுகாப்பை வழங்குவதாக SBI கார்டின் வளைத்தளம் குறிப்பிட்டுள்ளது.
அதாவது அவசர காலத்தில், கார்டை முடக்கும் சேவை/ DL / பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை தொடர்பாக உதவி ஆகியவற்றை பெறுகிறது. இது PIN, பிஷிங், டெலிஃபிஷிங், OTP, தேவையில்லாத பரிவர்த்தனைகள் தொடர்பான மோசடிகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.
இந்த கார்டு மேம்படுத்தப்பட்ட பிறகு, கிளாசிக் கார்டுக்கு ரூ. 999 செலுத்த வேண்டும், பிரீமியம் கார்டுக்கு ரூ. 1499 செலுத்த வேண்டும், பிளாட்டினம் கார்டுக்கு ரூ. 1999 என கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்திய பிறகு, CPP வாடிக்கையாளர்களுக்கு, கிட் அனுப்பப்படும். அதில் உள்ள படிவத்தை நிரப்பி, CPPக்கு திரும்பி அனுப்ப வேண்டும். வாடிக்கையாளர் விரும்பினால், தனது அட்டை மற்றும் ஆவணங்களை பதிவு செய்ய CPPயின் அழைப்பு மையத்தை அணுகலாம்.
