திக் திக் திக்… காதலித்த பெண்ணை தீர்த்துக்கட்டிய காதலன்… கழுத்தை நெரித்து கொன்று… சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரன் சிக்கியது எப்படி?…

By Swetha on ஐப்பசி 17, 2026

Spread the love

தமிழ்நாட்டின் போடிநாயக்கனூரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் நித்யா, கேரள மாநிலம் இடுக்கி ராஜகுமாரி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவரும் கடந்த 2023-ம் ஆண்டு முதல் பழகி வந்துள்ளனர். பின்னர் சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், தங்கள் உறவு குறித்துப் பேச விரும்புவதாகக் கூறி நிஷாந்த், கடந்த 11-ந்தேதி நித்யாவைச் சந்திப்புக்கு அழைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பூபாரா பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருவரும் சந்தித்துப் பேசியபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நிஷாந்த், நித்யாவின் கழுத்தை நெரித்து மயக்கமடையச் செய்ததுடன், கல்லால் தாக்கி அவரைப் பரிதாபமாகக் கொன்றுள்ளார். பின்னர் இரவு நேரத்தில் அவரது உடலை ஆட்டோ ரிக்ஷாவில் பம்ப்ளா அணைப் பகுதிக்குக் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

   

எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். செல்போனை அணைத்துவிட்டுத் தலைமறைவாகியிருந்த நிஷாந்தைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், முறிந்துபோன உறவைப் புதுப்பிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.