ஜப்பானில் புல்லட் ரேயில் மோதி உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த தேசிகாவின் அஸ்தி சொந்த ஊரில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணூர் மாவட்டம் படியூரைச் சேர்ந்த வி. தேசிகா, கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி ஜப்பானில் நடந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடலை இந்தியா கொண்டுவருவதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் காரணமாக, குடும்பத்தினரின் சம்மதத்துடன் இறுதிச் சடங்குகள் ஜப்பானிலேயே முழுமையாக நடத்தப்பட்டன.
https://twitter.com/TheSouthfirst/status/2111010102929133748/video/1
இதனைத் தொடர்ந்து, அவரது அஸ்தி ஜப்பானில் இருந்து பாதுகாப்பாக கேரளா கொண்டுவரப்பட்டு, அவரது தந்தை பிரகாசனிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
