ஐயோ கொடுமையே… காரில் காதலியின் சடலத்துடன்… மணிக்கணக்கில் சுற்றிய காதலன்… ஸ்கெட்ச் போட்ட நண்பன்… டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்… பகீர் பின்னணி…!!

By Swetha on ஆவணி 6, 2026

Spread the love

புதுடெல்லியின் முனிர்கா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 24 வயதான அனுராக், தனது காதலியான 18 வயது கனிகா மீது வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டுள்ளார். சம்பவத்தன்று அனுராக்கின் வீட்டிற்கு கனிகா வந்திருந்தபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அனுராக், ஆணிகள் பொருத்தப்பட்ட மரக் கட்டையாலும், அறையிலிருந்த சிறிய மேசையாலும் கனிகாவின் தலை மற்றும் முகத்தில் கண்மூடித்தனமாகத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலைக்குப்பின் சடலத்தை அப்புறப்படுத்தத் தெரியாமல் தவித்த அனுராக், உதவிக்காகத் தனது நண்பரை வரவழைத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பருடன் சேர்ந்து, உடலை வீசுவதற்காக ஜே.என்.யூ. சாலை மற்றும் சஞ்சய் வனம் பகுதிகளில் காரில் பல மணி நேரம் இடம் தேடியுள்ளார். அனுராக்கின் பிடியில் இருந்த நண்பர், தனது குடும்பத்தினரிடம் பேச வேண்டும் என்று தந்திரமாகச் செல்போனை வாங்கி, உடனடியாக 112 என்ற அவசர எண்ணிற்கு அழைத்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

   

தகவல் அறிந்த சில நிமிடங்களிலேயே விரைந்து வந்த கிஷன்கர் காவல் துறையினர் அனுராக்கை கைது செய்தனர். பின்னர் அவரது வீட்டிற்குச் சென்று கனிகாவின் உடலைக் கைப்பற்றி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையுறுதியான உடைந்த மேசை உள்ளிட்ட ஆதாரங்களையும் தடயவியல் நிபுணர்கள் பறிமுதல் செய்தனர். காதலியை அடித்துக் கொன்று உடலை மறைக்க முயன்ற இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.