காட்டுக்குள் தனிமையில் சென்ற இளம் ஜோடி… காதலி கண் முன்னே துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய காதலன்… பெரும் பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே குறுங்கலூர் பகுதியில் காளிதாஸ் (23) என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெரிதும் படிக்காத நிலையில் புதுக்கோட்டையில் உள்ள சமோசா தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த மூன்று வருடங்களாக வேலை செய்து வந்தார். அருகில் உள்ள ஊர்களில் நடக்கும் சந்தைகளில் சமோசா கடை போடுவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் அரிமளம் சந்தையில் சமோசா கடை போட்ட போது சமோசா வாங்க வந்த அந்த பகுதியை சேர்ந்த இருவது வயதுடைய உஷா என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களுடைய பழக்கம் காதலாக மாறி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

பிறகு இருவரும் அடிக்கடி வெளியில் செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் வழக்கம்போல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே இருவரும் கொத்தமங்கலம் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த காளிதாஸ் காதலியின் துப்பட்டாவை பயன்படுத்தி அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் உயிரிழந்த காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், காளிதாசின் காதலை உஷா, நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம், அப்போது சண்டை வந்து என்னை அவர் அடிச்சிட்டாரு, நான் மயங்கி கீழே விழுந்து விட்டேன், மயக்கம் தெளிந்து பார்த்த போது அவர் தற்கொலை பண்ணிட்டு இறந்தது தெரிய வந்தது என்று வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த காளிதாசின் குடும்பத்தினர், உஷா காளிதாஸ் டார்ச்சர் செய்து வந்ததாகவும் எப்போதும் போன் பேச வேண்டும் என தொல்லை கொடுத்ததாகவும் காளிதாஸ் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை, உஷா தான் ஏதோ செய்துள்ளார் என்று காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.