பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான “தமிழா தமிழா” மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புகழ்பெற்ற தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, சமூக முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்பது வழக்கம். இந்நிலையில், இந்த வார நிகழ்ச்சி “தலை முடியை இழந்ததால் வாழ்க்கை தலைகீழ் ஆனது என்பவர்கள் VS பொதுமக்கள்” என்ற பரபரப்பான தலைப்பில் ஒளிபரப்பானது.
View this post on Instagram
இந்த விவாதத்தில் பங்கேற்ற ஒரு நபர், தனது வழுக்கை தலை காரணமாகத் தான் அனுபவித்த துன்பங்கள் மற்றும் சமூகப் புறக்கணிப்பு குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
அவரது வாக்குமூலத்தின்படி, சுமார் 30 திருமண வரன்கள் பார்த்திருந்த நிலையில், ஒவ்வொரு முறையும் ‘தலை வழுக்கை’ என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் நிராகரிக்கப்பட்டுள்ளார். வழுக்கையால் தனது வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பது குறித்த அந்த நபரின் உணர்ச்சிகரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் காணொளி, இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
