‘சூது கவ்வும்’ படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் லொள்ளு சபா மனோகரா.? இயக்குனர் நலனின் விநோத ஆசை..

By vinoth

Updated on:

சூதுகவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி. ப்ளாக் காமெடி என்ற ஜானரில் அதற்கு முன்பு தமிழ் சினிமாவில் மும்பை எக்ஸ்பிரஸ் என்ற தோல்விப்படம் மட்டுமே ரிலீஸ் ஆகியிருந்தது. ஆனால் சூதுகவ்வும் திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த படத்தைக் கமல்ஹாசன் இயக்குனர் நலன் குமாரசாமியை அழைத்துப் பாராட்டினார். மேலும் தன்னை வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார். ஆனால் ஏனோ அந்த படம் உருவாகவில்லை. சூதுகவ்வும் படத்தில் நடித்த விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சனா, எம் எஸ் பாஸ்கர், கருணாகரன் என அத்தனை நடிகர்களும் இன்று தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

   

இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர் சி வி குமார் தயாஎரித்து வருகிறார். இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா, நடிக்க முதல் பாகத்தில் நடித்த பலர் இந்த பாகத்திலும் நடிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இரண்டாம் பாகத்தை அர்ஜுன் இயக்குகிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சிவி குமார் சூதுகவ்வும் படத்தினைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “சூதுகவ்வும் படத்தை இயக்குனர் நலன் என்னிடம் சொல்லும்போது விஜய் சேதுபதியின் தாஸ் கதாபாத்திரத்துக்கு முதலில் லொள்ளு சபா மனோகரைதான் மனதில் வைத்து எழுதி இருந்ததாக சொன்னார். அதைக் கேட்டு நான் ஷாக் ஆகிவிட்டேன்.

அதன் பிறகு நான் கார்த்திக் சுப்பராஜ் எல்லாம் சேர்ந்து அவரை சமாதானப்படுத்திதான் விஜய் சேதுபதியை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தோம்.” எனக் கூறியுள்ளார்.