அத பத்தி நான் பேச விரும்பல ; பேட்டியின் போது திடீரென கடுப்பான லோகேஷ் கனகராஜ்

By Deepika

Published on:

மாநகரம் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராகி விட்டார். தெலுங்கில் ராம்சரண் தொடங்கி ஹிந்தியில் அமிதாப் பச்சன் வரை பெரிய பெரிய நடிகர்கள் இவருடன் இணைந்து பணியாற்ற கேட்டு கொண்டு வருகிறார்கள்.

Lokesh to direct superstar in thalaivar 171

ஆனால் லோகேஷ் கனகராஜோ ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் வேளைகளில் பிசியாக இருக்கிறார். கைதி படத்தின் வேளைகளில் இறங்கியிருக்கும் லோகேஷ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல விக்ரம் படத்தின் இரண்டாவது பாகத்தையும் இயக்க உள்ளார்.

   
Lokesh kanagaraj and shruti haasan in inemal teaser

இப்படி மோஸ்ட் வான்டட் இயக்குனராக லோகேஷ் இருக்கும்போது, நட்புக்காக சில படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். இந்தநிலையில், ஸ்ருதிஹாசன் பாடியுள்ள ஆல்பம் பாடலில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். அவர் ஸ்ருதியுடன் ரொமான்ஸ் செய்யும் இந்த ஆல்பம் தான் இப்போது ட்ரெண்டிங்.

Lokesh kanagaraj about his family

இதுகுறித்த பிரஸ்மீட் சமீபத்தில் நடைபெற்றது, அதில் கலந்துகொண்ட லோகேஷ், பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்வியால் கடுப்பாகி விட்டார். என்ன நடந்தத்த்து என்றால், பத்திரிகையாளர் ஒருவர், லோகேஷ் உங்கள் மனைவி உங்களை இயக்குனராக பார்த்துள்ளனர் இப்போது நடிகராகி உள்ளீர்கள், இதை பார்த்து உங்கள் மனைவி என்ன சொன்னார் என கேட்டார்.

Lokesh kanagaraj doesnt want to talk about his family

இந்த கேள்வியால் லோகேஷ் டென்ஷானாகி விட்டார், நான் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன், என் பெர்ஷனல் பத்தி கேட்காதீர்கள். என் குடும்பத்தின் மீது மீடியா வெளிச்சம் படுவதை நான் விரும்பவில்லை. நான் இயக்குனராக இருக்கிறேன் அதனால் நீங்கள் என் படங்கள் ஓதி மட்டும் கேளுங்கள், பெர்ஷனல் வேண்டாம் என கூறிவிட்டார்.

author avatar
Deepika