தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கைதி விக்ரம் மாஸ்டர் லியோ கூலி ஆகிய படங்களை டைரக்ட் செய்து முன்னணி நட்சத்திர இயக்குனராக மாறினார். இதில் லியோ மற்றும் கூலி படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக படுதோல்வி படங்களாக இருந்தன. இப்போது ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்ய உள்ளார்.
இதற்கிடையே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டிசி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் நடித்து வருகிறார். இதுதான் அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம். இந்த படத்தில் அவர் 35 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவிலேயே ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகர் என்ற சாதனையை லோகேஷ் கனகராஜ் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
