20 வருஷமா வீட்டுக்கே போகல… பேங்க் வேலையை விட்டுட்டு வந்ததுனால வீட்ல… முதன் முறையாக குடும்பத்தை பற்றி பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் முதன்முதலில் வங்கியில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக குறும்படங்களை இயக்கத் தொடங்கினார். அதன்பிறகு ஒரு கதையை உருவாக்கி பல தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார். யாரும் அவரது கதையை எடுப்பதற்கு முன்வரவில்லை பின்னர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷியும் அவரது கதையையும் நம்பி படம் தயாரிக்க ஒப்புக்கொண்டது.

   

அப்படி உருவான திரைப்படம் தான் மாநகரம். அழகான திரைக்கதையை குறைவான பட்ஜெட்டில் அமைத்து ரசிகர்களை கவர்ந்தார். எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனார். அதன்பின்னர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற திரைப்படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். ஒரே இரவில் நடக்கும் ஒரு கதைக்கு மிகவும் சிறப்பான கதை அம்சத்தை கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

அதைத் தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து ‘மாஸ்டர்’ திரைப்படம் ,கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ திரைப்படம் போன்றவற்றை இயக்கி மிகவும் பிரபலமானார். லோகேஷின் படங்களை ‘லோகேஷ் யுனிவர்ஷ்’ என ரசிகர்கள் கூறத் தொடங்கினார்கள். அந்த வகையில் தற்போது லியோ திரைப்படமும் எல் சிவில் இணைகிறதா? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். விஜய் வைத்து அவர் இயக்கிய லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த திரைப்படம் கட்டாயம் வெற்றி பெறும் என பலரும் நம்பி காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜ் தனது குடும்பத்தை பற்றி பேசி இருந்தார். அதாவது தான் 20 வருடங்களாக சரியாக வீட்டிற்கு செல்லவில்லை என்றும், ஏதாவது பண்டிகை மற்றும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மட்டுமே சென்று வருவதாக தெரிவித்தார். மேலும் தான் வேலையை விட்டு வந்தபோது பலரும் வருத்தப்பட்டதாக கூறினார். பொதுவாக நான் என்ன செய்கிறேன் என்பதை தனது பெற்றோரிடம் கூறமாட்டேன். அதனால் அவர்களும் தன்னிடம் கேட்டுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார். தற்போது கட்டாயம் என்னை நினைத்து அவர்கள் பெருமைப்படுவார்கள் என கூறினார்.