லோகேஷின் LCU உருவான விதம்.. அசால்டாக தட்டி தூக்கிய நெட்பிளிக்ஸ்.. அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா..??

By Nanthini

Updated on:

தமிழ் சினிமாவில் மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் லோகேஷ் கனகராஜ். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்த இவர் இரண்டாவதாக கார்த்தி நடிப்பில் கைது திரைப்படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். அடுத்து விஜய்யுடன் மாஸ்டர், கமலுடன் விக்ரம் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

   

கைதி படத்தில் இருந்து லிட் எடுத்து விக்ரமை இயக்கிய லோகேஷ் அவருக்கு என்று சினிமா டிக்கெட் சினிமாட்டிக் யுனிவர்சை உருவாக்கினார். அதன் அடிப்படையில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற LCU உருவானது. அதனைப் போலவே லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விஜயின் லியோ திரைப்படத்தையும் LCU பின்னணியில் இயக்கி இருந்தார். இதனால் LCU என்பது மிகப் பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது.

இந்த நிலையில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எவ்வாறு தொடங்கப்பட்டது என்பதை ஒரு ஆவணப்படமாக லோகேஷ் இயக்கி உள்ளதாகவும் அதனை பிரபல நெட்பிலிக்ஸ் ஓடிடி தளம் 3 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆவணப்படம் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் அனிருத் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்த நரேன் இது பற்றி ஏற்கனவே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதாவது இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகும் எனவும் அதற்கான வேலைகள் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

author avatar
Nanthini