கூலி படத்துக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து டைரக்ட் செய்யப் போகும் படம் எது என அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில் லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படம் வெளியான போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஒரு படம் இயக்க லோகேஷூக்கு ஒரு அட்வான்ஸ் தொகை கொடுத்திருந்தது. இப்போது அந்த நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க லோகேஷ் கமிட் ஆகியிருக்கிறார்.
இந்த படத்தின் ஹீரோ ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் தான். அட்லி படத்தை முடித்து விட்டு அவர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க வருகிறார். வருகிற 2026ம் ஆண்டில் ஜூலை மாதத்தில் படப்பிடிப்பை துவங்கவும், அடுத்த 2027ம் ஆண்டில் அந்த படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் இரும்புக்கை மாயாவி கதை அல்ல. வேறு ஒரு புதிய களத்தில் உருவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
