பராசக்தி படத்தில் பல இடங்களில் கத்திரி போட்ட தணிக்கைக்குழு.. படத்தோட ஜீவனே அதுதானே? – அப்செட் ஆன இயக்குனர் சுதா கொங்கரா!

By Elango on மார்கழி 25, 2025

Spread the love

வருகிற ஜனவரி 10ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கடந்த 1960களில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் வில்லனாக நடிகர் ரவி மோகனும், சிவகார்த்திகேயன் அதர்வா இருவரும் அண்ணன் தம்பியாகவும் நடித்துள்ளனர். இந்நிலையில் பராசக்தி படம் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் தணிக்கை சான்றிதழுக்காக அந்த படத்தை தணிக்கைக்கு அனுப்பியிருந்தனர்.

பராசக்தி படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு அதிகாரிகள், சில காட்சிகளை கோடிட்டு காட்டி அவற்றை கத்தரிக்குமாறு கூறியுள்ளனர். மேலும் பல காட்சிகளை அவர்களை நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இயக்குனர் சுதா கொங்கரா எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அந்த காட்சிகளை படத்தில் நீக்கினால் கதையின் ஜீவனே பொய்விடும் என்று புலம்பி இருக்கிறார். இதையடுத்து பராசக்தி படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப படக்குழு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.