ரொமான்ஸ் OK.. ஆக்ஷன் எப்படின்னு தெரியலையே.. லோகேஷை வைத்து புதிய பிளான் போடும் சுதா கொங்கரா..!!

By admin on ஆவணி 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் இயக்கத்தில் ரிலீஸ் ஆன மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

   

அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2 உள்ளிட்ட படங்களை லோகேஷ் இயக்க உள்ளார். மாஸ்டர் படத்திலும், ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திலும் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடித்திருந்தார். சமீபத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக இனிமேல் என்கிற ஆல்பம் பாடலில் லோகேஷ் நடித்துள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.

   

 

 

இப்போது சினிமாவில் நடிக்க லோகேஷுக்கு வாய்ப்புகள் வருகிறது. இந்த நிலையில் சுதா கோங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படம் உருவானது. இந்த படத்தில் முதலில் நடிக்க கமிட்டானது சூர்யா தான். ஆனால் ஒரு சில காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகி விட்டார். இதனால் சூர்யாவுக்கு பதிலாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது திரைப்படம்.

இந்த நிலையில் புறநானூறு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழுவினர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். லோகேஷ் ஸ்கிரிப்ட்டை படித்து பார்த்துவிட்டு தனது முடிவு எடுப்பதாக கூறியுள்ளாராம். அப்படி புறநானூறு திரைப்படத்தில் லோகேஷ் நடிப்பதாக இருந்தால் கூலி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு புறநானூறு படத்தில் நடிப்பார் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.