பிரபல நடிகையான சுலக்ஷனா தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, மற்றும் ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். முதன் முதலில் பாக்கியராஜ் இயக்கி நடித்த தூறல் நின்னு போச்சு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரை உலகில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, ராஜதந்திரம், வைகாசி பொறந்தாச்சு, சின்னத்தம்பி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் படங்களிலும் சுலக்ஷனா நடித்துள்ளார். சமீபத்தில் சுலக்ஷனா அளித்த பேட்டியில் கூறியதாவது, சின்ன வயசுலயே ஹீரோயின் ஆகணும்னு என் வீட்டுல கண்டிப்பா சொல்லிட்டாங்க. நிறைய ஆடிஷன் போயிருக்கேன். நீ சின்ன பொண்ணா இருக்க, ஒல்லியா இருக்க, அப்படி இப்படின்னு சொல்லி என்ன ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு தான் ஹீரோயின் ஆனேன்.
இந்த நிலையில் சில்க் ஸ்மிதா பற்றி பேசிய சுலோக்ஷனா அது ரொம்ப தங்கமான பொண்ணு. சில்க் ஸ்மிதா பற்றி தெரிஞ்சவங்க அவங்கள ரொம்ப நல்லவங்கன்னு தான் சொல்லுவாங்க. ரொம்ப பாசமான பொண்ணு. அப்பவே சில்க் ஸ்மிதா என்கிட்ட நான்தான் உங்க கணவரை முதல்ல லவ் பண்ணேன். ஆனா நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்க அப்படின்னு சொல்லுவாங்க. அப்ப கூட நான் அப்படியே இருந்துகிறேன். நீ வேணா என் கணவரை லவ் பண்ணிக்கோ அப்படின்னு கூட சொல்லி இருக்கேன்.
அப்போ சில்க் ஸ்மிதா வேண்டாம்னு சொல்லிடுவாங்க. சில்க் ஸ்மிதா பேசும்போது அது தப்பா எடுக்க தோன்றாது. இது என் கணவருக்கே தெரியும். இறந்துபோனவங்கள பார்க்கிறது எனக்கு ரொம்ப பயம். சில்க் ஸ்மிதா இறந்தபோது நான் போய் பார்க்கவில்லை. சில்க் ஸ்மிதா தற்கொலை பண்ணிக்கிற ஆள் இல்ல. அவ ரொம்ப தைரியமான பொண்ணு. ஏதோ எங்கயோ தப்பா நடந்திருக்கு. நல்லா ஆத்மா. தைரியமான பெண் என கூறியுள்ளார் என ஓப்பனாக பேசி உள்ளார்.