டேஸ்ட்அட்லஸ் (TasteAtlas) நிறுவனம் வெளியிட்ட ‘உலகின் 20 சிறந்த சிக்கன் உணவுகள்’ என்ற தரவரிசைப் பட்டியலில், வட இந்தியாவின் பிரபலமான உணவான பட்டர் சிக்கன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் துருக்கியின் தாவுக் டோப்காபி முதலிடத்திலும், மொராக்கோவின் ரிஃபிசா மற்றும் தென் கொரியாவின் சிக்கின் ஆகியவை 2-வது இடத்திலும் உள்ளன. இந்தத் தரவரிசையில், மற்றொரு இந்திய உணவான தந்தூரி சிக்கன் 14-வது இடத்தைப் பெற்றுள்ளது.
வெண்ணெய் கலந்த கிரீமியான குழம்பில் தந்தூரி கோழியின் துண்டுகளைச் சேர்ப்பதன் மூலம் இந்த உணவு மாயாஜாலச் சுவையை உருவாக்குகிறது. வீணாகும் தந்தூரி சிக்கன் துண்டுகளைப் பயன்படுத்துவதற்காக இந்த உணவு முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சுவையான பட்டர் சிக்கனை நாண் உடன் சேர்த்துச் சாப்பிடவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அதே சமயம், இந்தியாவில் பலரின் விருப்ப உணவாக இருக்கும் சிக்கன் பிரியாணி இந்தப் பட்டியலில் இடம்பெறாதது குறித்துப் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…
பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…