தமிழ் சினிமாவின் இயக்குனர், நடிகர் மற்றும் பாடகர் என கொடிகட்டி பறந்த டி ராஜேந்திரனின் மகன் தான் சிம்பு. சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகின்றார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தனது தந்தையைப் போலவே இயக்குனர், பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகின்றார். சினிமாவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் இவருக்கான ரசிகர் கூட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தற்போது சினிமாவில் பிசியாக பலம் வந்து கொண்டிருக்கும் சிம்பு இதற்கு முன்பு நடித்து கைவிடப்பட்ட படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கெட்டவன்:
பல்லவன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு இயக்கி நடித்த திரைப்படம் தான் கெட்டவன். இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் சந்தானம், லேகா வாஷிங்டன் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த நிலையில் படம் முழுமையாக எடுக்கப்பட்டு சென்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சென்சார் அதிகாரிகள் எக்கச்சக்கமான காட்சிகளை கத்தரி போட்டு தூக்கிய நிலையில் வேறு வழியில்லாமல் இப்படத்தை கைவிட்டனர்.
வாலிபன்:
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் சிம்பு இயற்கை நடிப்பதாக இருந்த திரைப்படம் தான் வாலிபன். இந்த திரைப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருந்த நிலையில் இந்த படம் வெளிநாடுகளில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்ததால் அதன் பட்ஜெட் எகிறியது. இதன் காரணமாக படத்தை ட்ராப் பண்ணி விட்டனர்.
வேட்டை மன்னன்:
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடித்த திரைப்படம் தான் வேட்டை மன்னன். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு நடிப்பில் ஆக்சன் திரைப்படமாக இந்த படம் உருவான நிலையில் படப்பிடிப்பு 50 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கியதால் இந்த திரைப்படத்தை ட்ராப் செய்துவிட்டனர்.
A/C:
நியூ திரைப்படத்தின் இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் சிம்பு நடிப்பதற்கு கமிட்டான திரைப்படம் தான் ஏசி. இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அசின் நடிக்க இருந்த நிலையில் இருவரை வைத்து போட்டோ சூட் எல்லாம் நடத்தியுள்ளனர். ஆனால் சில காரணங்களால் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னரே படத்தை கைவிட்டனர்.
கான்:
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் கான். இந்தத் திரைப்படத்தை திரில்லர் கதை அம்சத்தில் உருவாக்க செல்வராகவன் திட்டமிட்டு இருந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் படக்குழு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த திரைப்படத்தை டிராப் செய்து விட்டனர்.
இப்படி சிம்பு நடிப்பில் வெளியாக இருந்த சுமார் ஐந்து திரைப்படங்கள் பாதியிலேயே டிராப் ஆகிவிட்டது.