பாக்கியராஜ் முதல் SJ சூர்யா வரை.. டைரக்ஷனை விட்டுட்டு நடிக்க வந்த இயக்குனர்களின் லிஸ்ட்..!!

By admin on ஆடி 15, 2024

Spread the love

இயக்குனராக திரையுலகில் பயணத்தை ஆரம்பித்து நடிகர்களாக மாறியவர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

கே.பாக்யராஜ்:

   

இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1979 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படம் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், விடியும் வரை காத்தரு உள்ளிட்ட படங்களை இயக்கினார். படம் இயக்குவதை விட்டுவிட்டு பாக்யராஜ் நினைத்தது யாரோ, கணிதன், துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

   

குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்” வாயை கொடுத்து மாட்டி கொண்ட பாக்யராஜ்! மாற்று திறனாளிகள் கொந்தளிப்பு | Director and actor Bhagyaraj born prematurely speech has drawn ...

 

 

சேரன்:

சேரன் கடந்த 1997-ஆம் ஆண்டு ரிலீசான பாரதி கண்ணம்மா திரைப்படம் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஒரு காலகட்டத்திற்கு மேல் சேரன் நடிப்பதிலும் ஆர்வம் காண்பித்தார். சொல்ல மறந்த கதை, ஆடும் கூத்து, பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள், மூன்று பேரும் மூன்று காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சேரன் பிறந்த நாள் ஸ்பெஷல்: தமிழ் மனங்களில் தனி இடம்பெற்ற படைப்பாளி | cheran birthday special - hindutamil.in

SJ சூர்யா:

எஸ் ஜே சூர்யா அஜித் நடித்த வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கினார். படம் இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் எஸ் ஜே சூர்யாவுக்கு ஆர்வம் அதிகம். ரசிகர்கள் நடிப்பு அரக்கன் என சொல்லும் அளவுக்கு தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். வியாபாரி, நண்பன், மெர்சல், மாநாடு, வாரிசு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா படங்களில் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு அசத்தலாக இருக்கும்.

எஸ்.ஜே. சூர்யாவின் அக்காவை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

கௌதம் வாசுதேவ் மேனன்:

கௌதம் வாசுதேவ் மேனன் கடந்த 2001-ஆம் ஆண்டு ரிலீசான மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். படம் எப்போது மட்டும் இல்லாமல் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் கௌதம் வாசுதேவன் நடித்த வருகிறார்.

விரைவில் "வேட்டையாடு விளையாடு-2".. இயக்குனர் கவுதம் மேனன் | Tamil cinema vettaiyadu vilaiyadu 2 movie will come gautam vasudev menon

சிங்கம் புலி:

சிங்கம் புலி அஜித் நடித்த ரெட் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சூர்யாவை வைத்து மாயாவி திரைப்படத்தை இயக்கினார். பிதாமகன் படத்தில் வசனகர்த்தாவாகும் வேலை பார்த்துள்ளார். இப்போது காமெடி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் சிங்கம்புலியின் நடிப்பு அருமையாக இருக்கும்.

சிங்கம்புலி மகாராஜா படத்துல நடிக்க அந்தப் படங்கள் தான் காரணமாம்...! அட இப்படி எல்லாமா யோசிப்பாரு?