தீபாவளி பண்டிகை… மது பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 19, 2025

Spread the love

தமிழகத்தில் அக்டோபர் 20 நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் உள்ள பலரும் குடும்பத்தோடு தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க வேண்டும் என டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிகம் விற்பனையாகும் மது வகைகளின் இருப்பை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வழக்கத்தை விட மது விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.