கட்டாயக் காதல்… ஆபாச செய்கை… கல்லூரி மாணவியை தொடர்ந்து தொந்தரவு… ஒரே ஒரு போன் கால்… சிங்கப்பெண் அதிரடிப்படையின் மாஸ் செயல்… நெகிழ்ச்சியில் மக்கள்…!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்த 31 வயது சமையல் தொழிலாளியான சொக்கலிங்கம் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை நீண்ட நாட்களாகக் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த இவர், அந்த மாணவியிடம் தொடர்ந்து எல்லையற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்ததோடு மட்டுமல்லாமல், ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவியின் தந்தை, உடனடியாக பெண்களுக்கான பாதுகாப்பிற்குரிய ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யின் கட்டணமில்லா உதவி எண்களான 1091-ஐத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியஜென்சி தலைமையிலான போலீசார், செக்காரக்குடி கிராமத்திற்கு விரைந்து சென்று சொக்கலிங்கத்தை அதிரடியாகக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவர் தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். மாணவியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட சொக்கலிங்கம் மீது போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Visaka

Recent Posts

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

6 minutes ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

7 minutes ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

16 minutes ago

ஐயோ… காதலால் சீரழிந்த வாழ்க்கை?… அனுபமாவுக்கு நேர்ந்த கொடுமை… இணையத்தை அதிர வைத்த… ரேகா நாயரின் பேட்டி…!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் சந்தித்த நச்சுத் தன்மையுள்ள காதல் உறவைப் பற்றியும், அதில் ஏற்பட்ட மன உளைச்சல்கள் பற்றியும்…

16 minutes ago

“ப்ளீஸ் என்னை விட்டுரு…” கெஞ்சிய மனைவி… ரகசிய திருமணத்தால் தாலியை கழற்றி… மாமியாரை கொடூரமாக கொன்ற வாலிபர்…. பயங்கர சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையத்தில் வாடகைக்கு வசித்து வந்த பழனிசாமி - தனலட்சுமி தம்பதியின் 21 வயது…

19 minutes ago

தாய்க்கு வந்த சந்தேகம்… பிறந்தநாள் பார்ட்டியில் தொடங்கிய விபரீதம்… சிறுமிக்கு மது கொடுத்து ஓராண்டாக வன்கொடுமை… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி ஒருவருக்கு, கடந்த ஓராண்டாக தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு…

24 minutes ago