அதிர்ச்சி..! தாத்தாவின் கையைப் பிடித்துச் சென்ற 5 வயது சிறுவன்… பாய்ந்து வந்த பெண் சிங்கம் – குஜராத்தில் நடந்த நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்…!!

By Swetha on ஆனி 26, 2026

Spread the love

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கிர் வனப்பகுதியை ஒட்டியுள்ள சதுரி கிராமத்தில், ஒரு சிங்கம் ஐந்து வயது சிறுவனைத் தாக்கி கொன்ற கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜியான் தேவ்குன்பாய் சீதா என்ற ஐந்து வயது சிறுவன், இரவு நேரத்தில் தனது தாத்தாவின் கையைப் பிடித்துக்கொண்டு பால் வாங்கச் சென்றபோது, புதரில் பதுங்கியிருந்த ஒரு பெண் சிங்கம் திடீரென பாய்ந்து வந்து சிறுவனைத் தாக்கியது. தாத்தா நிலைமையை உணர்வதற்குள், அந்தச் சிங்கம் சிறுவனைக் கவ்விக்கொண்டு காட்டுக்குள் ஓடியது.

தாத்தாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்து காட்டுக்குள் சிறுவனைத் தேடினர். சில இளைஞர்கள் சிங்கத்தைத் துரத்திச் சென்று சிறுவனை மீட்க முயன்ற போதிலும், அவர்களால் சிங்கத்திடமிருந்து சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. தேடுதல் வேட்டையின் முடிவில், சம்பவ இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிறுவனின் ரத்தக் கறை படிந்த உடல் மீட்கப்பட்டது. இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

   

சம்பவம் நடந்த பிறகு, வனத்துறையினர் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக ஒரு பெரிய தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்தத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்திய பெண் சிங்கம் உட்பட ஐந்து சிங்கங்கள் மயக்க மருந்து செலுத்தப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டன. பிடிபட்ட சிங்கங்களில் ஒன்றின் வாந்தியில் சிறுவனின் உடல் பாகங்கள் கண்டறியப்பட்டு, அவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அம்ரேலி மாவட்டத்தில் கடந்த ஒரே மாதத்தில் நடக்கும் மூன்றாவது சிங்கத் தாக்குதல் இது என்பதால், வனவிலங்கு மற்றும் மனித மோதல்களைக் கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.