BIG NEWS: EPFO ஆன்லைன் போர்டல் 3 நாட்களுக்கு முடக்கம்.. பிஎஃப் பணம் எடுப்பவர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு..!!

By Soundarya on ஆனி 26, 2026

Spread the love

மத்திய அரசின் மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆன்லைன் போர்டல் சேவைகள் இன்று (ஜூன் 26, 2026) முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களுக்கு புதிய பிஎஃப் கிளைம்கள் , முன்பணம் , மற்றும் கணக்கு பரிமாற்றம் போன்ற முக்கியமான ஆன்லைன் சேவைகளை பயனர்கள் பயன்படுத்த முடியாது. இவற்றுடன் உமாங் செயலி மூலமாக வழங்கப்படும் பிஎஃப் சேவைகளும் தற்காலிகமாகப் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த முடக்க காலத்திற்கு முன்பாகவே ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட கிளைம்கள் எதுவும் ரத்து செய்யப்படாது என்றும், அவை தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் முடிந்த பிறகு பரிசீலிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. போர்டல் முடங்கியிருக்கும் இந்த நாட்களில் அவசரத் தேவைகள் மற்றும் இதர விபரங்களை அறிந்துகொள்ள பயனர்கள் எஸ்.எம்.எஸ் , மிஸ்டு கால் , வாட்ஸ்அப் உதவி மற்றும் பிரத்யேக ஹெல்ப்லைன் எண் (14470) ஆகியவற்றின் மூலம் மாற்று வழிகளில் தொடர்புகொள்ளலாம். ஜூன் 29-ஆம் தேதி முதல் அனைத்து ஆன்லைன் சேவைகளும் வழக்கம் போல் முழுமையாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.