குஜராத் மாநிலத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றின் வேலை செய்து வரும் பணியாளர் ஒருவர் இரவு வேளையில் காற்று வாங்குவதற்காக நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தார்.. அந்த சமயத்தில் சிறுநீர் கழிப்பதற்காக அவர் சென்ற நிலையில் கைகளை பின்னால் கட்டியபடி மெதுவாக நடந்து சென்றுள்ளார். அங்கு தூரத்தில் நாய்கள் குறைத்தபடி இருந்துள்ளன. பொதுவாக ஏதாவது தீங்கு நேர போகிறது என்றால் அதனை தெரிவிப்பதற்காக இது போன்ற நாய்கள் குரைப்பது வழக்கம். ஆனால் அந்த நபர் எதையும் கண்டுகொள்ளாமல் வீடு ஒன்றை கடந்து சென்று அதன் முனைப்பகுதிக்கு சென்றபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரைப் போலவே சிங்கம் ஒன்று மந்த வழியாக வந்துள்ளது.
இருவரும் எதிர்ப்பகுதிகளிலிருந்து நடந்து வந்த போது நடுவில் இருந்த வீடு அவர்கள் இருவரையும் பார்க்க முடியாதபடி மறைத்து விட்டது. சரியாக வீட்டின் மறைவை கடந்து தெருமுனைக்கு அவர் சென்று அவசரத்துக்கு ஒதுங்கலாம் என்று நினைத்தபோது அந்த நபரும் சிங்கமும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டனர். அந்த நபர் நொடி பொழுதில் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். என்ன செய்வது என யோசிப்பதற்குள் ஆச்சரியம் ஏற்படும் வகையில் அந்த சம்பவம் நடந்தது. அதாவது சிங்கமும் நபரும் வந்த வழியிலேயே திரும்பி ஓட்டம் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிங்கம் அவரை எதுவும் செய்யாமல் அதுவும் ஓட்டம் பிடித்த வீடியோ பலரையும் வியக்க வைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் துறைமுகங்களைச் சுற்றி அமெரிக்க கடற்படை கடுமையான…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில்,…
'தாய் கிழவி' திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை ரேச்சல் ரெபெக்கா, தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் கொடூரமான…
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இன்றும் நாளையும் மற்றும் தேர்தல் நாளன்றும் என மொத்தம்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டுடனான விவகாரத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இன்றைக்குள் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்…
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல், அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரிடம் வேண்டுமென்றே…