கிளைமேக்ஸ் நல்லாவே இல்லையே சார்- ரஜினிகாந்த் படத்தை குறித்து ரஜினிகாந்திடமே தைரியமாக பேசிய இயக்குனர்

By Arun

Published on:

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் லிங்குசாமி. இவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “ஆனந்தம்”. மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, சினேகா உள்ளிட்ட பலரும் நடித்த இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றிபெற்ற குடும்பத் திரைப்படமாக அமைந்தது.

“ஆனந்தம்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் கலந்த காதல் திரைப்படமான “ரன்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் நடிகர் மாதவனுக்கு திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. “ஆனந்தம்” எடுத்த இயக்குனரா இத்திரைப்படத்தை இயக்கினார் என்று பலரும் ஆச்சரியப்பட்டுபோயினர்.

   

“ரன்” திரைப்படத்தை தொடர்ந்து “சண்டகோழி”, “பையா”, “வேட்டை” என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார் லிங்குசாமி. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட லிங்குசாமி ரஜினிகாந்திடம் தான் வெளிப்படையாக பேசிய விஷயத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “லிங்கா”. இத்திரைப்படம் ரஜினிகாந்த் கெரியரில் சுமாரான திரைப்படங்களுள் ஒன்றாக அமைந்தது. இத்திரைப்படத்தை பார்த்த லிங்குசாமி, உடனே ரஜினிகாந்திற்கு ஃபோன் செய்து, “சார், படத்தோட கிளைமேக்ஸ் ரொம்ப தப்பா இருக்கு” என்று தைரியமாகவும் வெளிப்படையாகவும் கூறினாராம். இந்த தகவலை அந்த பேட்டியில் கூறியுள்ளார் லிங்குசாமி.

லிங்குசாமி இது போல் பல நடிகர்கள், தயாரிப்பாளர்களிடமும் மிக வெளிப்படையாக அவர்களின் திரைப்படங்களை குறித்து கூறிவிடுவாராம். இது போல் ஒரு முறை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரித்த “உன்னைகொடு என்னை தருவேன்” திரைப்படத்தை குறித்து வெளிப்படையாக அவரிடமே விமர்சித்திருக்கிறார்.

சௌத்ரியுடன் இருந்த பலருக்கும் படம் பிடிக்கவில்லை என்றாலும் அவர் மனது நோகக்கூடாது என்பதற்காக “படம் நன்றாக வந்திருக்கிறது” என்று பொய் சொன்னார்களாம். ஆனால் லிங்குசாமி மட்டும் விமர்சித்து கூறியிருக்கிறார். அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து ஆர்.பி.சௌத்ரி லிங்குசாமியை அழைத்து, “நீ சொன்னதுதான் கரெக்ட்” என்று கூறி புன்னகைத்தாராம்.

author avatar