Actor Pradeep Ranganathan

மீண்டும் தள்ளிப் போகிறதா எல்ஐகே படம்? வரும் மார்ச் 19ல் ரிலீஸ் இல்லையா? – அப்செட் ஆன பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள்!

By Elango on மாசி 20, 2026

Spread the love

கோமாளி படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவரே ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த லவ் டுடே டிராகன் டியூட் படங்கள் தொடர் வெற்றியை பெற்ற நிலையில் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார். அடுத்து அவரே இயக்கி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் எல்ஐகே – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படம் ஓராண்டுக்கு மேலாக திரைக்கு வராமல் தாமதம் நீடிக்கிறது. வரும் மார்ச் 19ம் தேதி இந்த படம் ரிலீஸ் என தகவல் வெளியான நிலையில் அந்த நாளில் துரந்தர் 2 சர்தார் 2 படங்கள் வெளியாவதால் மீண்டும் எல்ஐகே படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.