மக்களே..! வீட்டில் இன்று வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் பணம் கொட்டுமாம்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

By Soundarya on மார்கழி 3, 2025

Spread the love
கார்த்திகை மாதம் என்றாலே விளக்குகள் தான் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருக்கார்த்திகை தீபம் ன்று வீடு முழுவதும் விளக்குகளால் அலங்கரிப்பர். இந்த வருடம் திருக்கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது.  கார்த்திகை தீபம் அன்று வீடுகளில் பெரும்பாலும் மண் அகலால் ஆன விளக்குகளை தான்  பயன்படுத்துவோம்.
ஆனால், இதற்கு பதிலாக வெள்ளி விளக்குகளை ஏற்றவதால் பல நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. வெள்ளி விளக்கில் மகாலஷ்மியும், விஷ்ணுவும் வாசம் செய்வதாக ஐதீகம். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்குவதற்கும், பணப்புழக்கம் அதிகரிக்கவும், நிம்மதியான வாழ்வுக்கும் வெள்ளி விளக்கு வழிபாடு அவசியம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல வேல் வடிவ குத்து விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சாஸ்திரம் சொல்வதாகவும் சொல்லப்படுகிறது.