அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இறந்ததிலிருந்து கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமைக்கு எதிரான அவர்களுடன் தொடர்பில் இருந்த தாக ஒரு மாதத்திற்கு முன்பு கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
அதன் பிறகு செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார். அதிமுக மற்றும் திமுகவின் உடைய கூட்டணிகள் ஓரளவுக்கு உறுதியான நிலையில் தமிழக வெற்றிக்கழகம் உடனான கூட்டணி மட்டும் இன்னும் உறுதியாக வில்லை. விஜய் கட்சி ஆரம்பித்தது முதல் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்று பேச்சுக்கள் அடிபட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் தலைவர்களும் நடந்து கொண்டனர்.
இந்நிலையில் பிற அரசியல் கட்சிகள் கூட்டத்தை கூட்ட பண உள்ளிட்டவற்றை செலவிடும் நேரத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு கூட்டத்தை குறைப்பதே சவாலாக உள்ளது என காங்கிரஸ் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. இன்று திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் விஜய்க்கு ஆதரவளிக்கும் வகையிலான இந்த பதிவு சீட் பேரத்தை அதிகரிக்கவே என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
