அட கடவுளே… 36-வது மாடியில் குடியிருந்தவருக்கு லிஃப்ட் வசதி ரத்து… M3M நிறுவனம் மீது பகீர் குற்றச்சாட்டு… இணையத்தில் வீடியோ வைரல்…!!

By Swetha on கார்த்திகை 2, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள புகழ்பெற்ற ‘ட்ரம்ப டவர்ஸ்’ குடியிருப்பில் வசிக்கும் வருண் சுஹாக் என்ற நபர், M3M பில்டர் நிறுவனம் தனது அடுக்குமாடி குடியிருப்புக்கான மின் தூக்கி வசதியைத் துண்டித்து, தன்னை வீட்டுச் சிறையில் வைத்தது போல் முடக்கியதாக சமூக வலைதளம் மூலம் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

36வது மாடியில் அமைந்துள்ள தனது வீட்டிற்குச் செல்லவோ அல்லது வெளியில் வரவோ முடியாமல் மின் தூக்கியின் அழைப்பு பொத்தான்களை நிறுவனம் முடக்கிவிட்டதாகவும், இதனால் தனது குடும்பத்தினரும் தானும் கடும் அவதிக்குள்ளானதாகவும் அவர் வெளியிட்ட வீடியோ மற்றும் பதிவுகள் இணையத்தில் பெரும் வைரலாகின.

   

https://twitter.com/varunsuhag/status/2116763914319151111/video/1

   

மறுபுறம், பராமரிப்புக் கட்டணம் செலுத்தப்படாததே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, பில்டர் தரப்பு பிரதிநிதிகள் பின்னர் மின் தூக்கி வசதியை மீண்டும் இயக்கியதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக M3M நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.