ராஜன்னா சிர்சில்லா மாவட்டம் வேமுலவாடாவில், 31 வயதான துர்கா பிரசாத் என்ற வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். எதிர்பாராத விதமாக நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள், துர்கா பிரசாத் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தபோதே அவருக்கு ஏற்பட்ட கடும் மாரடைப்பு காரணமாகத்தான் உயிரிழந்தார் என்பதை உறுதிப்படுத்தினர். வாலிபர் ஒருவர் வாகனம் ஓட்டும்போதே மாரடைப்பால் உயிரிழந்த செய்தி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/greatandhranews/status/2084502721521185118/video/1
இந்த திடுக்கிடும் உயிரிழப்புச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வாலிபர் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழும் அந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
