மேற்கு வங்காள மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சண்டிடாலா பகுதியில் அதிர்ச்சி அளிக்கும் பயங்கரமான சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வாகனங்களை அதிவேகமாக இயக்குவது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கொடூர சான்றாக அமைந்துள்ளது.
மக்கள் கூட்டம் நிறைந்த நேரத்தின் போது, அதிவேகமாக வந்த கார் ஓட்டுநர் அங்கு அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையை கவனிக்காமல் காரை இயக்கியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிதமாக அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்தப் பைக்கையும், அதை ஓட்டி வந்தவரையும் சுமார் 300 அடி தூரத்திற்கு கார் இழுத்துச் சென்றுள்ளது.
https://twitter.com/BigtvApp/status/2081252773602189677/video/1
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர விபத்தில், பைக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை பதறவைக்கும் இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளதுடன், மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் வேகக் கட்டுப்பாட்டுடன் வாகனங்களை இயக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
